மேலும் அறிய
Advertisement
சென்னை..காஞ்சிபுரம்..திருவள்ளூர்.. முக்கிய செய்திகள் சில..
உள்ளாட்சித் தேர்தல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை, புளியந்தோப்பு கட்டிடம் விவகாரம் உள்ளிட்ட முக்கிய செய்தி இதோ
1. தமிழகத்தில் 9 மாவட்டங்களில், நாளை முதற்கட்டமாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் 17,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், பறக்கும் படை சோதனையில், 4.69 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பெருந்தேவி தாயாருக்கு 19 கிலோ வெள்ளிகவசத் தடிகளை, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் பக்தர் காணிக்கையாக வழங்கினார்.
4. சென்னையில் இன்று அதிகாலை நகரின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, புரவைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. மழையில் காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
5. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்பதால் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
6. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு செய்த ஐஐடி நிபுணர் குழு, அதைக் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
7. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 15.41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.
8. திருவள்ளூர் அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஜிம் யிற்சியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
9. சென்ட்ரல்-ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இடையே அமைக்கப்பட்டு வந்த புதிய சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
10. தியேட்டர்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய, அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion