மேலும் அறிய

ரூ. 2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைபட்டு , கள்ளக் காதலுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்

கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து , கள்ளக் காதலன் மற்றும் ரவுடி கும்பலை வைத்து கொன்று நாடகமாடிய மனைவி உள்பட 6 பேர் கைது

பள்ளியில் கள்ளக் காதல்

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 35), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சவுமியா ( வயது 30). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவல ஊழியராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும், அதே பள்ளியில் பி.டி. மாஸ்டரான திலீப் ( வயது 28 ) என்பவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்த போதும் சவுமியா, திலீப்புடன் தொடர்ந்து நீண்ட நேரம் போனில் பேசுவாராம். இதையறிந்த ரமேஷ், சவுமியாவை கண்டித்துள்ளார்.

ரூ. 2 கோடி இன்சூரன்ஸ் பணம்

இவர்களது கள்ளக் காதல் தொடர்ந்து இருந்துள்ள நிலையில் , ரமேஷ் ரூ.2 கோடிக்கான காப்பீடு செய்திருப்பது சவுமியாவுக்கு தெரிய வந்தது. கள்ளக் காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருக்கும் ரமேஷை கொன்று விட்டால் ரூ.2 கோடி காப்பீடு பணம் கிடைக்கும்.

இதை வைத்து ஜாலியாக வாழலாம் என திலீப்பிடம் சவுமியா ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட திலீப், ரமேஷை கொல்ல திட்டமிட்டார். இதற்காக தனது தம்பி அபிஷேக்கிடம் கூறியுள்ளார். இவர்களது திட்டத்தின்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமேஷ் சென்ற பைக் மீது காரை மோதியுள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரமேசுக்கு கை எலும்பு முறிந்தது. இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரான ரவுடி கும்பல் தலைவன் ஜிதேந்திராவை திலீப்பிற்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் திலீப்பும், சவுமியாவும் பேசி ரமேசை கொல்ல ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

அதிக அளவு தூக்க மாத்திரை 

கடந்த டிசம்பர் மாதம் 19 - ம் தேதி இரவு ரமேஷிக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளை சவுமியா தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா தனது கள்ளக் காதலன் திலீப், ரவுடி கும்பலை வரவழைத்து கழுத்து பகுதியை துணியால் சுற்றி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர்.

மறுநாள் காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக சவுமியா அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூறி கதறி அழுது நாடகமாடினார். மறுநாள் இறுதிச் சடங்கு முடிந்து உடலை அடக்கம் செய்தனர்.

போட்டோவில் சிக்கிய காயம்

வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, அண்ணனின் இறுதிசடங்குக்கு வரமுடியாத நிலையில் அவருக்கு செல்போனில் இறப்பு, இறுதிச் சடங்கு போட்டோக்கள் அனுப்பப்பட்டது. இதை பார்த்த போது ரமேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சகோதாரி, ரமேஷின் வீடு அருகே வசிக்கும் தனது மனைவிக்கு தெரிவித்து போலீசில் புகார் அளிக்க செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சவுமியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதை சவுமியா ஒப்புக் கொண்டார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ரமேஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சவுமியா, அவரது கள்ளக் காதலன் திலீப், அபிஷேக் மற்றும் ரவுடி கும்பலான ஜிதேந்தர், ராம் மற்றும் ராகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..! கலக்கத்தில் சென்னை வாசிகள் - விஷம் பரவியது எப்படி?
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Embed widget