மேலும் அறிய

ரோடு ஷோ விதிமுறைகள் ; தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல உள்ளது - நீதீமன்றம்

ரோடு ஷோ - க்கு தமிழக அரசின் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை பார்க்கும் போது, தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல உள்ளது - உயர் நீதிமன்றம்

ரோடு ஷோ அனுமதிக்கு விதிமுறைகள் வகுக்க வழக்கு

கரூரில் செப்டம்பர் 27 - ல் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இதையடுத்து பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஏராளமானோர் கூடுவதை கட்டுப்படுத்தவும், அரசியல் கட்சிகளின், 'ரோடு ஷோ' மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி, துாத்துக்குடியை சேர்ந்த திருகுமரன், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் த.வெ.க., சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு வந்த வழக்கு

இந்த வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் வரைவு, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அ.தி.மு.க. - த.வெ.க., மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில், 'நிலையான வழிகாட்டு விதிமுறைகள் தொடர்பாக எங்கள் கட்சிகள் சார்பில் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. ஆனால், விதிமுறைகளை வகுக்கும் முன் எங்களை அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்று, தெரிவிக்கப்பட்டது.

த.வெ.க., தரப்பில், 'அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பேர் நிற்கலாம் எத்தனை பேர் அமரலாம் என்ற விபரங்களையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் , அனைத்து கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகே, இந்த வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களின் விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன என்று, தெரிவிக்கப்பட்டது.

தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை

தமிழக அரசின் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை பார்க்கும் போது, 'ரோடு ஷோ'க்களுக்கு அனுமதி பெறுவது என்பது தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டிய நிலை போல உள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா, ஏற்கப்பட்டதா என, முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவும், எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் உள்ளது என, கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget