மேலும் அறிய
Advertisement
ரயில்வே ஊழியரை கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் தலையில் ஓங்கி வெட்டினார். மேலும் அவரது இடுப்பிலும் கத்தியால் குத்தினார். இதில் சங்கர் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்
சென்னை அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் வயது (46) . ரயில்வே ஊழியரான இவர் பெரம்பூர் கேரேஜில் பணி புரிந்து வருகிறார். இரவில் பணி முடிந்து 10 மணி அளவில் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி 7 வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 இளைஞர்கள் சங்கரை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறவே அவரது மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து உள்ளனர். அப்போது அவர் கூச்ச லிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அப்போது அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் தலையில் ஓங்கி வெட்டினார்.
மேலும் அவரது இடுப்பிலும் கத்தியால் குத்தினார். இதில் சங்கர் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக சங்கர் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பொறுத்தப்பட்டுருந்த சி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வந்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டு ஓட்டேரியில் பதுங்கி இருந்த ஓட்டேரி யை சேர்ந்த வசந்தகுமார் வயது 19, அஜித்குமார் வயது 21,விஜய் வயது 19 மற்றும் ஒரு சிறார் ஆகிய நான்கு பேரையும் ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.
பேசின் பிரிட்ஜ் பகுதியில் குடிபோதையில் மெடிக்கல் ரெப்பை இளைஞரை தாக்கிய 4 பேர் கைது
சென்னை புளியந்தோப்பு நான்காவது தெருவைச் சேர்ந்தவர் பயஸ் பாஷா 24 இவர் மெடிக்கல் பிரதி நிதியாக வேலை செய்து வருகிறார். புளியந்தோப்பு கே.பி பார்க் புதிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கே.பி பார்க் புதிய குடியிருப்பு வளாகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் ஐந்து இளைஞர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ள னர். அப்போது குடிபோதையில் இருந்த நபர்கள் சரமாரியாக பயஸ் பாட்ஷா வை தாக்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து விட்டு பயஸ் பாஷா வை மீட்டு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பயஸ் பாஷா சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியைச் சேர்ந்த தவக்கலை (எ) சந்தோஷ் வயது 21, பிரகாஷ் (எ) ஸ்டீபன் வயது 21 , வெள்ள விக்கி (எ) விக்னேஷ் வயது 23 , நரசிம்மன் வயது 22 ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மனோஜ் என்ற நபரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பேசன் பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion