மேலும் அறிய

Anna University | அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்..!

ஆர்.வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றுபவர்.

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் டாக்டர். ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டார். நியமனத்துக்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் குப்தா வழங்கினார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம்  முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியாற்றுபவர். தெர்மல் ஸ்டோரேஜ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருபவர். 

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பேராசிரியர் டாக்டர். செல்வராஜ் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து, 69% இடஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது, கொரோனா பெருந்தொற்று  காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை உறுதிப்படுத்துவது  போன்ற பல்வேறு சிக்கல்களை  எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பத்தை கடந்த மே மாதம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையிலான தேடல் குழு வெளியிட்டது. துணைவேந்தர் பொதுவாக மூன்றாண்டு கால அளவுக்குப் பதவி வகிப்பார். இருப்பினும், துணைவேந்தராக பணியமர்த்தம் செய்யப்பட்ட ஒருவர் தம்முடைய அலுவலக பதவி காலத்தின் போது 70 வயதினை நிறைவு செய்தால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம்  முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக ஷீலா ராணி சுங்கத், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி தியாகராஜன்  ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தகுதியும், அனுபவமும் வாய்ந்த விண்ணப்பத்தார்கள் அண்ணா பல்கலைக்கழக போர்ட்டலில் உள்ள விண்ணப்பப் படிவங்களை பதிவு இறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021, ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னதாக, nodalofficer2021@gmail.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

மூன்று பெயர்களைக் கொண்ட தேர்வுப் பெயர் பட்டியலை வேந்தருக்கு தேடல் குழு பரிந்துரைக்கும். இதன், அடிப்படையில் தமிழக ஆளுநர் (வேந்தர்) அடுத்த துணைவேந்தரை  தேர்வு செய்வார் என்று சொல்லப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget