தெரு நாய்கள் பாதுகாப்பு ; அதுக்கு தானே ஓட்டு போட்டோம் !! நடிகை நிவேதா பெத்துராஜ் அதிரடி குரல்
நாய்களை நாம் கொல்லக் கூடாது. அரசு மக்களை பாதுகாத்து, நாய்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காகத் தான் வாக்களிக்கிறோம்

தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல்
தெரு நாய்களுக்கு ஆதரவாக Heaven for Animals என்ற தனியார் அமைப்பின் விழிப்புணர்வு பேரணி புதுப்பேட்டையில் நடைபெற்றது. இதில் 100 - க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகங்களை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாக நடந்து சென்றனர், இறுதியாக பேரணியில் திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நிவேதா பெத்துராஜ் ;
கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது. அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. நாய்களைப் பிடித்து அவற்றிற்கு தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விட்டாலே போதும். காரில் போற உங்களுக்கு என்ன தெரியும், பைக்கில் போற எங்களுக்கு தான் தெரியும் என கூறுகிறார்கள். இதற்கு தீர்வு உள்ளது.
இந்த உலகத்தை அனைவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் போராடுகிறோம். கூடிய விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.பள்ளியில் இருந்தே தெரு நாய்களுக்கு ஆதரவாக மாணவர்களிடம் விழிப்புணர்வு கூற வேண்டும்.
நாய்கள் குறைந்து விட்டால் குரங்குகள் அதிகரிக்க தொடங்கி விடும். ஒரு இடத்தில் நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாகி பயத்தை உருவாக்குகிறார்கள். இதை செய்யாமல் இதற்கான தீர்வை நாம் கொண்டு வர வேண்டும். ஒருவன் நம்மிடம் தவறாக நடந்து கொள்கிறான் என்பதற்காக அவனை நாம் கொல்வதில்லை.
அதே போல தான் நாய்களையும் நாம் கொல்லக் கூடாது. அரசு மக்களை பாதுகாத்து, நாய்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காகத் தான் வாக்களிக்கிறோம் என தெரிவித்தார்.





















