மேலும் அறிய
Advertisement
நோயாளிக்கு தையல் போடும் போது ஊசியை இடுப்பில் வைத்து தைத்த தனியார் மருத்துவமனை
நோயாளி ரஞ்சித்குமார் பெயரை பயன்படுத்தி சில வழக்கறிஞர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் போலீசில் புகார்
சென்னை புளியந்தோப்பு பி.கே காலனி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (28). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது கடந்த 30 ஆம் தேதி வேலை செய்யும் இடத்தில் இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக புளியந்தோப்பு பட்டாளம் டிம்லஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஞ்சித் குமாருக்கு இடுப்பு பகுதியில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன. மீண்டும் மூன்று நாட்கள் கழித்து வரும் படி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை முடித்துக் கொண்டு ரஞ்சித்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் ரஞ்சித் குமாருக்கு மருத்துவமனை சார்பில் இருந்து தொலைபேசி மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறி உள்ளார்கள். ரஞ்சித்குமார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது தையல் பிரிக்க வேண்டும் என கூறியுள்ளனர் நேற்று தானே தையல் போட்டிருக்கு இன்று ஏன் தையல் பிரிக்க வேண்டும் என ரஞ்சித்குமார் கேட்டுள்ளார்.
இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்க வேண்டும் காயம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்போது ரஞ்சித் குமாருக்கு வயிற்றில் போடப்பட்ட தையல்களில் இரண்டை பிரித்து பார்த்துள்ளனர். மேலும் உடனடியாக இடுப்பு பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி ஸ்கேன் எடுத்து வரும்படி அனுப்பி உள்ளனர். ரஞ்சித்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுத்து உள்ளார். அப்போது இடுப்பில் சிறிய அளவிலான ஊசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்குமார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை பத்திரமாக அப்புறப்படுத்தி விடுவதாக கூறியுள்ளனர்.
இதனை ஏற்க மறுத்த ரஞ்சித் குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த ஊசி அகற்றப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சித்குமார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனை டாக்டர் மோகன்ராஜ் புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஞ்சித்குமார் பெயரை பயன்படுத்தி என்னிடம் சில வழக்கறிஞர்கள் 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் மேலும் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion