Prahlad Modi: பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யார் இந்த பிரகலாத் மோடி..?
தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீரா பென் மோடிக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தவர் பிரகலாத் மோடி. பிரதமர் மோடிக்கு இளையவர்.பிரதமர் மோடிக்கு பிரஹலாத் மோடி, சோமா மோடி, பங்கஜ் மோடி, அம்ரித் மோடி மற்றும் வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி உட்பட 4 சகோதரர்கள் மற்றும் 1 சகோதரி உள்ளனர்.
பிரகலாத் மோடி அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், 2001 முதல் அந்த அமைப்பில் இருந்து வருகிறார். ரேசன் கடையில் பணியாற்றிய பிரகலாத் மோடி வயது முதிர்வு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
குடும்பத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது தாயார் ஹிரா பென் மோடிக்கு பிரதமர் மோடி மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது தனது முதல்வர் அலுவலகத்திற்கு பிரகலாத் மோடியை பிரதிநிதியாகச் சென்று நியாய விலைக் கடை உரிமையாளர்கள் தரம் குறைந்த பொருட்களை எதிர்கொள்வது தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதித்துள்ளார்.
பிரகலாத் மோடியின் எதிர்ப்புகள், பாஜக அரசின் மீதான விமர்சனங்கள்:
பிரகலாத் மோடி பாஜகவிற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்ததில் இருந்து பிரகலாத் மோடி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்.
பிரதமர் மோடி அரசாங்கங்களை விமர்சித்த பிரகலாத் மோடியின் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- கடந்த மார்ச் 2015ம் ஆண்டு பிரகலாத் மோடி தனது சகோதரரின் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆட்சி செய்ய தோல்வியற்றது. மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை எடுத்து கொண்டது இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார்.
- நியாய விலைக் கடை விநியோகஸ்தர்கள் தங்கள் கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி மாநிலத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தியபோது பிரகலாத் மோடி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்.
- கடந்த பிப்ரவரி 2021ம் ஆண்டு பிரகலாத் மோடி உத்தரபிரதேசத்தில் தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறி லக்னோ விமான நிலையத்தில் தர்ணா நடத்தினார். அப்போது உ.பி.யில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- அதே வருடம் வணிகர்கள் சங்கம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வர்த்தகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டாம் என்று பிரகலாத் மோடி வணிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
- பிரகலாத் சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவின் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகலாத் மற்றும் நரேந்திர மோடி இடையேயான உறவு:
- பிரஹலாத் மோடி பல ஆண்டுகளாக தனது சகோதரர் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை பலமுறை விமர்சித்தாலும், சகோதரர் மீது எந்தவொரு தனிப்பட்ட கருத்துகளை தாக்கியது இல்லை.
- பிரகலாத் 2006-14 க்கு இடையில் மூன்று முறை மட்டுமே பிரதமர் மோடியை சந்தித்தார், அவர் பிரதமரான பிறகு அவரை சந்திக்கவில்லை. ஆனால் இரண்டு சகோதரர்களும் ஆரோக்கியமான உறவைக் கொண்டுள்ளனர் என்று அவ்வபோது தெரிவித்து கொள்வர்.
- மேலும், பிரதமர் மோடியின் ஜசோதாபெனுடன் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான உறவு இருப்பதாகவும் பிரகலாத் கூறினார். இதுகுறித்து அவர், “நரேந்திர மோடியின் மனைவி ஜசோதாடனுடன் எங்கள் குடும்பம் ஆரோக்கியமான உறவை கொண்டுள்ளது. அவர் தனது சகோதரருடன் உஞ்சாவில் வசிக்கிறார். நாங்கள் அவரை அடிக்கடி சந்திக்கிறோம்” என தெரிவித்தார்.