EPS: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் இபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி மனு - அபராதம் விதித்து தள்ளுபடி செய்த நீதிமன்றம்
பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்த பாலச்சந்தர் என்பவருக்கு ரூ. 50, 000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பலியல் வழக்கு:
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இபிஎஸ் -க்கு எதிராக வழக்கு:
இவ்வழக்கில் , முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்த பாலச்சந்தர் என்பவர் மீது ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.