மேலும் அறிய
Advertisement
37 வயது தம்பியை சுமந்து வந்த அக்கா... காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் நெகிழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நடைபெற்ற மக்கள் குறைத்திருப்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவர் தனது அக்காவுடன் மனு கொடுக்க வந்த சம்பவம் பலராலும் கவனிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் , ரோடு தெரு பகுதியை சேர்ந்தவர் வேள்வி ( 42 ) . வேள்வி திருமணமாகி சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவருடைய கணவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்று உள்ளார்.
வேள்வி பெருநகர் ,ரோட்டு தெரு பகுதியில் கடந்த சில வருடங்களாக அவருடைய தம்பி குமாருடன் ( 37) வசித்து வருகிறார் . குமாருக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் அவருடைய வலது கால் முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக , மாற்றுத்திறனாளி , தனது தம்பி குமாரை அக்கா வேள்வி கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வீட்டுமனை வேண்டுமென, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். மாற்றுத்திறனாளி குமார், ஒற்றை காலில் தன் அக்காவுடன் நடந்து வந்து மனு அளித்தனர். தம்பி குமார் சோர்வடையும்பொழுது, அவரை அக்கா வேள்வி தனது இடுப்பில் தூக்கி சுமந்து கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் .ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 226 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒழையூர் மற்றும் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .இரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரும்புலியூரில் ஏரி பாசனகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூரில் இருந்து கரும்பாக்கம் வரும் ஏரிப் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: உத்திரமேரூர் வட்டம் அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம் கிராமம். இக்கிராம விவசாய நிலங்களுக்கு அரும்புலியூர் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக ஏரிப்பாசன நீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அரும்புலியூரைச் சேர்ந்த சில விவசாயிகள் தங்களுக்கு வசதியாக கால்வாயை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கடைமடைப் பகுதிக்கு ஏரிநீர் வந்து சேரவில்லைய இதுகுறித்து உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற எங்களிடம் பணம் இல்லை என தெரிவிக்கிறார்கள். இதனால் கரும்பாக்கம் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்குவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயம் செய்ய வழிவகை செய்துதருமாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion