மேலும் அறிய
WATCH VIDEO: சிலம்பம் சுற்றிய மருத்துவர் ராமதாஸ் - வன்னியர்களுக்காக இன்னொரு ராமதாஸ் பிறக்கப்போவதில்லை என பேச்சு
"தொடையை தட்டி தோளை உயர்த்தி" உன்னில் இருக்கும் மகாசக்தி வெளியே வரும்போது அன்புமணி முதல்வர் ஆவார்’’

சிலம்பம் சுற்றும் மருத்துவர் ராமதாஸ்
செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
சிலம்பம் சுற்றிய ராமதாஸ்.. "தொடையைத் தட்டி தோளை உயர்த்து" பாமக ராமதாஸ் பேச்சு pic.twitter.com/KSWa7zncp6
— Kishore Ravi (@Kishoreamutha) December 24, 2021
அப்போது பேசிய அவர் எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது, நான் தான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன். வன்னியர்களுக்கு இன்னொரு ராதமாஸ் பிறக்க போவதில்லை, இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான். வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமகவிற்கு வர வேண்டாம், வாக்கு மட்டும் பாமகவிற்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பாமக ஆட்சி நடைபெற வேண்டும் அதற்க்காக தனித்து நின்று அன்புமணியை முன்னிலை படுத்தி தேர்தலிலும் போட்டியிட்டோம். 2016 இல் கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்களை கூட அப்போது பெறவில்லை, வட தமிழ்நாட்டில் வாழும் அனேக மக்களும் வன்னியர்கள், ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம். தொடையைத் தட்டி தோளை உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது உன்னில் இருக்கும் சக்தி வெளிப்பட்டால் அப்போது அன்புமணி இந்த தமிழ்நாட்டை ஆட்சி புரிவார்.

தமிழகத்தை ஆண்ட முதல்வர்களில் 10 நாட்கள் கூட வன்னியர் யாரும் முதல்வராக இருந்ததில்லை, அதேபோல் தமிழக காவல் துறையில் ஐஜி பதிவிற்கு மேல் வன்னியர்கள் யாரும் தற்போது இல்லை, செயலாளர்களில் வன்னியர்கள் யாரும் இல்லை, மாவட்ட ஆட்சியர்களில் வன்னியர்கள் யாரும் இல்லை என வேதனை தெரிவித்தார். நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டுமா அறிக்கை வெளியிடுகிறேன், ஒட்டு மொத்த தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். எந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இல்லாத அக்கறை தனக்குதான் உள்ளது என பேசினார். முன்னதாக ராமதாஸ் வருகையின்போது சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சி மூலம் வரவேற்பு கொடுத்தனர். கலை நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பு குழுவினர் மேடையில் ஏறி ராமதாஸ் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து ராமதாஸ் சிறுமி ஒருவரின் சிலம்பத்தை வாங்கி விளையாட்டாக கையில் சுற்றினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement