ஒரு தரம்... ரெண்டு தரம்... மூன்று தரம்... ரூ.13 லட்சத்திற்கு ஏலம் போன ஊராட்சித் தலைவர் பதவி!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.
தமிழ் நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வருகிறது. 22ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட உள்ளது.
தேர்தலுக்கான பணியை தீவிரமாக செய்து வரும் தேர்தல் ஆணையம், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்க புகார் எண்களை அறிவித்தது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது கிராமங்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டன. அது போன்று சம்பவங்களை தடுக்கும் வண்ணம் இந்த முறை கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
Jothimani Speech: கலவரக்காரர்களுக்கு நடுங்குகிறது - காரணம் கலகக்காரர் ஜோதிமணி மாஸ் பேச்சு !
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னங்குப்பம் கிராமத்திற்கு பட்டியலின சமூகத்துக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவியை 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதை அறிந்து விசாரணை நடத்தச் சென்ற வட்டாட்சியரை பொன்னங்குப்பம் பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதிக வாக்குகளைக் கொண்ட துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து ஒருவரை ஏலம் விட்டு நிறுத்துவதால் குறைவான வாக்குகளைக் கொண்ட பொன்னங்குப்பம் பஞ்சாயத்தை சார்ந்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு மறுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினார். இதனால் பொன்னாங்குப்பம் ஊராட்சியில் இருந்து துத்திப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய மக்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, பொதுமக்களுடன் செஞ்சி வட்டாட்சியர் ராஜான் மற்றும் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் குறித்து அறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் பொன்னாங்குப்பம் பகுதிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பொன்னாங்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி 13 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SA Chandrasekhar Speech: எனக்கும் விஜய்க்கும் சண்டதான்..உண்மையைச் சொன்ன எஸ்.ஏ.சி