மேலும் அறிய

EXCLUSIVE: நாங்க படிக்காதவங்க! இல்லாதவங்க! அரசுக்கு எங்க கோரிக்கை இதுதான்! - பத்மஸ்ரீ விருது நாயகர்கள் சிறப்பு பேட்டி!

பாம்பு பிடிப்பது ஒரு வீரமான தொழில் என்று எங்களுக்கு தெரியும் .ஆனால் அதில் இருக்கும் அதிகாரம் பற்றி எங்களுக்கு தெரியாது

குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களை மத்திய அரசு கௌரவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

EXCLUSIVE: நாங்க படிக்காதவங்க! இல்லாதவங்க! அரசுக்கு எங்க கோரிக்கை இதுதான்! - பத்மஸ்ரீ விருது நாயகர்கள் சிறப்பு பேட்டி!
 
பத்மஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக, இருவரிடமும்  ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம், அப்பொழுது அவர்கள் தெரிவித்த பதில்கள் பின் வருமாறு. ஏபிபி நாடு சார்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மாசி சடையன் கூறுகையில்,
 
கேள்வி :- விருது வாங்குவது எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்க எதிர்ப்பார்த்திருக்கீங்களா ? 
 
மாசி:- இந்த விருது வாங்கியது எனக்கு எங்கள் சமுதாயத்திற்கும் பெருமை இந்த அரசுக்கும் பெருமை. நிச்சயமாக நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
 
பாம்பு பிடித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது எப்படி பார்க்கிறீர்கள் ?
 
பாம்பு பிடிப்பது ஒரு வீரமான தொழில் என்று எங்களுக்கு தெரியும் .ஆனால் அதில் இருக்கும் அதிகாரம் பற்றி எங்களுக்கு தெரியாது.
 
EXCLUSIVE: நாங்க படிக்காதவங்க! இல்லாதவங்க! அரசுக்கு எங்க கோரிக்கை இதுதான்! - பத்மஸ்ரீ விருது நாயகர்கள் சிறப்பு பேட்டி!
அரசு என்ன செய்ய வேண்டும் ? 
 
அரசு எது செய்தாலும், மகிழ்ச்சி தான் எங்களுக்கு , நாங்கள் படிக்காதவர்கள் தான் பாம்பு பிடித்து நல்ல பேர் வாங்க வேண்டும். எங்களுக்கு வீரம் கொடுத்தது இந்த பாம்பு பிடித்து தொழில் தான். பந்து விளையாட வெளிநாட்டிற்கு போவதை போல் நாங்கள் பாம்பு பிடிக்க சென்றோம் என கூறுகிறார் மாசி சடையன் . பல்வேறு நாடுகளுக்கு சென்று ராஜ நாகம் கண்ணாடிவிரியன் உள்ளிட்ட பல விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளோம் என தெரிவிக்கிறார் மாசி சடையன்.
 
விருது பெற்றது குறித்து வடிவேல் நம்மிடம் பகிர்ந்து கொள்கையில்,
 
பத்ம ஸ்ரீ விருது கொடுத்துருக்காங்க... எப்படி ஃபீல் பண்றீங்க...?  நீங்க எதிர்ப்பார்த்திருக்கீங்களா?
 
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறோம். நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை ஆனால் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 
 
 உங்களோட பின்னணி பத்தி சொல்லுங்க... குடும்பத்துல எப்படி ஃபீல் பண்றாங்க...
 
குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள், தினமும் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு. 

EXCLUSIVE: நாங்க படிக்காதவங்க! இல்லாதவங்க! அரசுக்கு எங்க கோரிக்கை இதுதான்! - பத்மஸ்ரீ விருது நாயகர்கள் சிறப்பு பேட்டி!
 
உங்க பாம்பு பிடி பயணம் பத்தி சொல்லுங்க... உங்க சமூகத்திற்கு இந்த விருது மூலமா எதாவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமா?
 
வெளிநாட்டுக்கு சென்று பாம்புகளைப் பிடித்துள்ளோம். வீரமாக சென்று பாம்பு பிடிப்பது தான் எங்களுடைய வழக்கம். அரசு எங்களுடைய சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.
 
உங்க சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க... பாம்புபிடி தொழில் பெரிதாக அங்கீகரிக்கப்படுவதில்லையே...?
 
என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை அரசு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என தழுதழுத்த குறளில் பேசுகிறார் வடிவேல். அங்கீகரிக்கவில்லை என்ற குறை இருக்கிறது, இவ்வளவு பாடுபட்டு பாம்பு பிடிக்கிறோம் ஆனால் நம்ம பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது .
 
உங்கள் வருங்கால சந்ததிகள் இந்த தொழிலை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறீங்களா? அல்லது வேறு தொழிலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீங்களா?
 
பாம்பு பிடிக்கும் தொழில்  தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். 
 
EXCLUSIVE: நாங்க படிக்காதவங்க! இல்லாதவங்க! அரசுக்கு எங்க கோரிக்கை இதுதான்! - பத்மஸ்ரீ விருது நாயகர்கள் சிறப்பு பேட்டி!
இந்த விருது மூலமாக மாற்றம் வரும் என்று நம்புகிறீர்களா?
 
என்ன சொல்வது, என்று தெரியவில்லை என கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கிறார் வடிவேல்.
 
வெளிநாட்டில் பாம்பு பிடித்த அனுபவம் எப்படி இருந்தது ?
 
அந்த அனுபவம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, நீங்க சூப்பரா பாம்பு பிடிக்கிறீர்கள் என வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எங்களை பாராட்டினார்கள். பக்காவா பாம்பு பிடித்தீர்கள் என வெளிநாட்டினர் பாராட்டியதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் வடிவேலு. இவர்கள் இருவருக்கும் தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget