பாசிசமா , பாயாசமா என்பது சினிமா வசனம் போல் உள்ளது - விஜய் பேச்சு குறித்து சிதம்பரம்
பாசிசமா பாயாசமா என்ற விஜய் பேச்சு சினிமா வசனம் போல் இருக்கிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் - ப.சிதம்பரம்
நாவல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் ஆ.சு எழுதி , திருமதி சௌந்திரா கைலாசம் இலக்கிய பரிசு பெற்ற "பஞ்சவர்ணம்" நாவல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின்பு , முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி
விஜய் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார் அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். புதிய கட்சியின் கோட்பாடாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய சில கொள்கைகளை வலியுறுத்தி பேசி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்கின்ற கேள்விக்கு? சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பது தேர்தல் தான் முடிவு எடுக்கும் இப்பொழுது எப்படி சொல்ல முடியும் சாத்தியமில்லாததெல்லாம் ஒரு காலத்தில் சாத்தியமாகலாம்.
பாசிசமா பாயாசமா என்கின்ற கேள்விக்கு ;
சினிமா வசனம் போல் இருக்கிறது. சினிமா வசனத்தை எல்லாம் இதையெல்லாம் கொள்கையாக எடுத்துக்க வேண்டாம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சரவணன் கூறியுள்ளது. அவருடைய சொந்த கருத்து சொந்த வேண்டுகோள் கட்சியோட கருத்து அல்ல எதுவாக இருந்தாலும் எங்கள் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. இந்தியா கூட்டணி எஃகு கோட்டை மாதிரி இருக்கிறது.
விஜய் கருத்தை வரவேற்கிறோம்
விஜய் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அவருடைய கருத்தை நாங்களும் வரவேற்கிறோம். கொள்கை முடிவு எங்களுடைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு என்கிறார் இப்படியாக பல கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். கூட்டணி ஆட்சி அமையுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் தான் மிகப்பெரிய சக்தி என்று கூறினார்.