மேலும் அறிய
நிதி நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறித்த பிரபல ரவுடி கைது
ஓட்டேரி கொசப்பேட்டை அருகே வரும் போது அவரைக் இரண்டு பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தை சென்றனர்

கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பெருமாள்
சென்னை ஓட்டேரி சச்சிதானந்தம் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் 21. இவர் கொசபேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தன்னுடன் வேலை செய்யும் காளிமுத்து என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பணம் வசூலித்து விட்டு ஓட்டேரி கொசப்பேட்டை அருகே வரும் போது அவரைக் இரண்டு பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்தை சென்றனர்.
இதுகுறித்து பெருமாள் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து புளியந்தோப்பு கே எம் கார்டன பகுதியைச் சேர்ந்த தினேஷ் (எ) ஐட்டு தினேஷ் 32 என்ற நபரை கைது செய்தனர். இவர் மீது புளியந்தோப்பு , ஓட்டேரி , தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து தினேஷ் மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவருடன் இருந்த பூச்சி என்ற நபரை தேடி வருகின்றனர்.
நகைக் கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி 9 சவரன் தங்க நகை கொள்ளை
சென்னை பெரவள்ளூர் ஜெகநாதன் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 56 இவர் தனது வீட்டின் முன் பகுதியில் ஜுவல்லரி கடை நடத்தி வருகிறார். மாலை நேரத்தில் கடைக்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் தங்கச் செயின் வாங்குவது போன்ற நகைகளை பார்த்து 3 சவரன் கொண்ட மூன்று தங்க சங்கிலிகளை எடுத்துக் கொண்டு திடீரென்று ஓட ஆரம்பித்தார்.

கடைக்காரர் அவரை பிடிக்க முற்பட்டபோது பிடிக்க முடியவில்லை இதனை அடுத்து சுரேஷ்குமார் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 9 சவரன் தங்க நகைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிக் கொண்டு ஓடிய நபரை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement