மேலும் அறிய

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..

நேற்று மாலை விழுப்புரம், ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்ற லட்சக்கணக்கான மக்கள் நேற்று மாலை முதலே சென்னை திரும்ப துவங்கியுள்ளனர். இதனால் நேற்று மாலை விழுப்புரம், ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி கிளம்பிய ஆம்னி பேருந்துகள் தற்பொழுது வரை சென்னையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..
 
இதன் காரணமாக வண்டலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வண்டலூர் வெளிவட்ட சாலையில் மூலம் பூந்தமல்லி வழியாக கோயம்பேடு சென்று அடைய உள்ளது. ஆம்னி பேருந்துகளை விரும்புபவர்கள் பெரும்பாலும் சென்னை உள்பகுதியில் செல்வதற்காகவே ஆம்னி பேருந்துகளில் வருவார்கள். ஆம்னி பேருந்துகளும் தாம்பரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு சென்று அடையும்.
 
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகள் தனி வழியில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் வண்டலூரில் இறங்கி செல்கின்றனர். இந்த நிலையில் வண்டலூர் பகுதியில் பெரும் அளவில் சிறப்புகள் இல்லாததால் கூட்டம் அலைமோதுகிறது. ஆட்டோக்கள் வாடகை கார்கள் உள்ளிட்ட கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..
 
 பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுக்க துவங்கியதால், வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  குறிப்பாக   சென்னை திருச்சி பிரதான சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலை சிக்கி தவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலில் கட்டுக்குள் கொண்டு வர 8  கவுன்டர்கள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..

 இதேபோன்று செங்கல்பட்டு அடுத்துள்ள பரணூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது. போக்குவரத்தை  கட்டுக்குள் கொண்டு வர போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் சிங்கப்பெருமாள் கோவில் ,கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையும் வாகன ஓட்டிகளை பெரிதும் பாதித்தது.

தலைப்பு செய்திகள்

Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Embed widget