தமிழகத்தில் நவீன துறைமுகங்கள்; அமைச்சர் எ.வ.வேலுவுடன் நார்வே தூதுக்குழுவினர் சந்திப்பு
சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலூவை சந்தித்த நார்வே நாட்டு தூதுக்குழுவினர் நவீன துறைமுகங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
நார்வே நாட்டுத் தூதுக்குழுவினர் கிறிஸ்டியன் ஆர்.வி.கார்ட்டர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து சிறு துறைமுகங்கள் துறை தொடர்பாக விவாதித்தனர். இந்த விவாதத்தில் பசுமை கடல், கடல்வழி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடலோர கப்பல் போக்குவரத்து, எல்என்ஜி (LNG) அடிப்படையிலான கப்பல் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் எ.வ.வேலு தமிழ்நாட்டிலுள்ள சிறு துறைமுகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். தமிழ்நாட்டில் நவீன புதிய துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாகவும், கடல்வழி புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை செயல்பாடுகளும் ஒத்துழைப்பதாகவும், நார்வே நாட்டு தூதுக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார். நார்வே நாட்டு மூத்த சந்தை ஆலோசகர்கள் ஆர்த்தி குமார் பாட்டியா, ஆஷிஷ் அகர்வால், வணிக ஆலோசகர் மோனிகா வால்டெஸ் கார்ட்டர் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப., தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் எஸ்.நடராஜன் இ.ஆ.ப., மாநில துறைமுக அலுவலர் எம்.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கு பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்கள் மூலம் வர்த்தகம் நாம் குறைந்த அளவே நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்திற்கு சிறிய கப்பல்களில் வரக்கூடிய சரக்குகளை இறக்குமதி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கு நம்மிடம் அதிநவீன சிறு துறைமுகங்கள் இல்லாத காரணத்தினால் ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்படவில்லை. இதனால் தான் தற்போது சிறு துறைமுகங்கள் அனைத்தும் அதி நவீன துறைமுகங்களாக அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் நவீன துறைமுகங்கள் அமைத்தால் தமிழகத்திற்கு அதிக அளவில் பொருளாதார ரீதியாக அதிக அளவில் சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனைத்தும் அதிக அளவில் நடைபெறும்.
Congress Protest : அரசாங்கம் 4-5 பேரில் நலனுக்காக நடத்தப்படுகிறது - ராகுல் காந்தி