Breaking Live : போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Background
என்.எல்சி விவகாரம் : பிரதமருக்கு முதமைச்சர் கடிதம்
என் எல் சிக்கு நிலம் வழங்கி குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சிறப்பு தேர்வின் மூலம் நியமிக்கப்பட வேண்டும். கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பயிற்சிப் பட்டதாரிகளை நியமிக்கக்கூடாது - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி கைது
விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க மு.க.ஸ்டாலுனுக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் 0.50% அதிகரிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50% ஆக அதிகரிப்பு - சக்தி காந்த் தாஸ்

