மேலும் அறிய
Advertisement
National Handloom Day: ‘கைத்தறி நெசவாளர் தினம் கிடையாது; எங்களுக்கு கருப்பு தினம் தான்’ - கொதிக்கும் பட்டு நெசவாளர்கள்
தேசிய கைத்தறி நினைவு தினத்தில் பட்டு நெசவு க்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.
விசைத்தறி சேலையை கைத்தறி பட்டு சேலை என விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டு கைத்தறி
காஞ்சிபுரம் ( Kanchipuram News ): பட்டு கைத்தறி நெசவு தொழிலுக்கும், பாரம்பரியம் மிக்க பட்டுச்சேலை விற்பனைக்கும், புகழ்பெற்று விளங்குவது காஞ்சிபுரம். பட்டு நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் சமீப காலங்களாக விசைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்ட பட்டு சேலைகளும், வெளியூர், வெளிமாநில, பட்டு சேலைகளும் தனியார் பட்டுச்சேலை விற்பனை கடைகள் மூலம் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் என விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், ஒரிஜினல் பட்டு சேலைகள் விற்பனை குறைந்து கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து மூடப்பட்டு வருகிறது.
வீடுகளில் கருப்பு கொடி
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய கைத்தறி தினம்,ஆகஸ்ட் ஏழாம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆன இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் நிலையில் பட்டு நெசவு தொழிலுக்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் பட்டு கைத்தறி நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குருவிமலை, களக்காட்டூர், முருகன் காலனி, கே எஸ் பி நகர், வரதராஜபுரம், தாட்டி தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கைத்தறி நெசவாளர்கள் வசித்து வரும் நிலையில் நெசவாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியினை ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு கொள்செய்ய வேண்டும்
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும், விசைத்தறி சேலைகளை கைத்தறி பட்டு சேலைகள் என்று விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் நெசவாளர் கடன் திட்டத்தில் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் கைத்தறி நெசவு நிறுவனங்களின் தேங்கியுள்ள பட்டுச்சேலைகளை முதல் அரசு கொள்செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கைத்தறி தினமான இன்று கைத்தறி நெசவாளர்கள் தங்கள் குடும்பங்களோடு தெருவில் நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion