மேலும் அறிய
Advertisement
தேசிய பெண் குழந்தைகள் தினம்: காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவர்கள்
"டிஜிட்டல் தலைமுறை, நமது தலைமுறை, நமது நேரம் இப்போது-நமது உரிமைகள், நமது எதிர்காலம்" என்ற வாசகங்கள் இருந்தன.
தேசிய பெண் குழந்தைகள் தினம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2008 ஆம் ஆண்டு தேசிய பெண் குழந்தைகள் தினத்தை துவக்கியது. இது நாட்டில் பெண்கள் சந்திக்கும் ஏற்றத்தாழ்வுகளை விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் பற்றி அனைவருக்கும் கல்வி கற்பதற்கும் முக்கிய குறிக்கோளாக இருந்தது வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு இது போன்ற விழிப்புணர்வுகள் அவசியம் என்பதால் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாட மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து இதற்கான விழிப்புணர்வுகளை அதிக அளவில் ஏற்படுத்த திட்டமிட்டது. தற்போது பெண் குழந்தைகளிடம் பாலியல் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் ஆசிரியர்கள் மட்டுமல்ல அதை பெற்றோர்களும் அவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு
இந்நிலையில் காஞ்சிபுரம் பெண் மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் அதிகளவு அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அவ்வகையில் கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மகளிர் மருத்துவர்கள் அணியின் சார்பில் டாக்டர் நிஷாபிரியம் தலைமையில் தேசிய பெண்குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. தேசிய பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மரு. சு. மனோகரன் விரிவாக எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்க மாநில துணை தலைவர் மரு.பி.டி.சரவணன் கலந்து கொண்டு தேசிய பெண்குழந்தைகள் தினம் குறித்து நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
"தற்காத்து கொள்ளுதல்"
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மகளிர் மருத்துவர்கள் அணித் தலைவர் மரு. எம். நிஷாப்ரியா செய்திருந்தார். இதில் உரையாற்றிய மருத்துவர் நிஷா பிரியம் , பெண் குழந்தைகள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்றவாறு கூறி அதனை மனதில் பதியுமாறு எடுத்துரைத்தது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று காஞ்சிபுரம் மாநகரை சுற்றியுள்ள பெண்கள் பள்ளியில் இதுகுறித்த விழிப்புணர்வு மருத்துவர்கள் சங்க பெண்கள் அணி சார்பில் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொருளாளர் மரு.வெ. ஞானகணேஷ், மற்றும் முன்னாள் தலைவர்கள் மரு.தி.விக்டோரியா, மரு.வி.லஷ்மி ,மரு. பொன். ஆதிரை மற்றும் இதர மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வருட கருப்பொருள்
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கான கருப்பொருளை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கு முன்பு, "டிஜிட்டல் தலைமுறை, நமது தலைமுறை, நமது நேரம் இப்போது-நமது உரிமைகள், நமது எதிர்காலம்" என்ற வாசகங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
முக்கியத்துவம்
பெண் குழந்தைகள் மீதான சமூகத்தின் அணுகுமுறையை மாற்றுவது, பெண் சிசுக்கொலைகளை குறைப்பது மற்றும் பாலின விகிதம் குறைவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றில் முக்கிய கவனம் செலுத்துவதால் தேசிய பெண் குழந்தைகள் தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இந்த நாள் பெண் குழந்தை மீதான அணுகுமுறையை மாற்ற உதவுகிறது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் நோக்கங்களை நிறைவேற்ற அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 'சேவ் தி கேர்ள் சைல்டு, பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ, சுகன்யா சம்ரித்தி யோஜனா, சிபிஎஸ்இ உதான் திட்டம், பெண் குழந்தைகளுக்கு இலவச அல்லது மானியக் கல்வி மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற முயற்சிகள் பெண்களை மேம்படுத்துவதில் பல முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை செய்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion