மேலும் அறிய

MSME - களுக்கு இரட்டிப்பு கடன் உச்ச வரம்பு !! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) பிணையில்லாக் கடன் உச்சவரம்பை ரூ.20 லட்சமாக உயா்த்துவதாக இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது

மும்பையில் ஆா்.பி.ஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்.பி.ஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு ஆா்.பி.ஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது ;

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பிணையில்லாக் கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக ( இரு மடங்கு ) உயா்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இந்தக் கூடுதல் கடன் தொகை வழங்கப்படும்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, தேசிய வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபாா்டு) ஆகியவை உறுப்பினா்களாக இருக்கும்.
 
மோசடியில் பணம் இழந்தவா்களுக்கு இழப்பீடு ; 
 
வங்கிச் சேவைகளில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் சில சமூக விரோதிகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பல்வேறு வகையில் பேசி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனா். இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது.
 
சிறிய அளவிலான மோசடிகளில் பணம் இழந்தவா்களுக்கு நிதி இழப்புக்கு ஏற்ப ரூ.25,000 வரை இழப்பீடு வழங்க புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களை நிதி மோசடியில் இருந்து காக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
கடன் வசூல் முகவா்கள், கடனைத் திரும்ப வசூலிக்கும் முறை குறித்தும் புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன. சில வகை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கிளைகளைத் திறப்பதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படவுள்ளன.
 
குறுகிய கால வட்டி விகிதம்
 
வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும்.
 
சா்வதேச அளவில் புவி அரசியல் பதற்றங்கள் அதிகரித்தாலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனும் வா்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இது இந்தியாவுக்கு நீண்ட காலத்துக்குப் பொருளாதார பலன்களை வழங்கக் கூடியதாக இருக்கும்.
 
பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்தது. ஆனால், சராசரியாக 2 சதவீதம் என்ற அளவிலேயே பணவீக்கம் உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியான மாா்ச் மாதத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 
நகை அடமான கடன் - கவலை தேவையில்லை
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் நகைக் கடன் நிலுவை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் வங்கிகள் அளித்துள்ள நகை அடமானக் கடன் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget