மேலும் அறிய
Advertisement
காஞ்சியில் போராட்டத்தில் குதித்த அரிசி ஆலை உரிமையாளர்கள்...! காரணம் என்ன தெரியுமா ?
அரிசி ஆலை உரிமையாளர்கள் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்
ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம்
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நியாயமாக நிறைவேற்றப்படவில்லை
இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வு சம்பந்தமாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த அரசாணையில் தங்களது கோரிக்கைகள் நியாயமாக நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என வேலை நிறுத்தம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு நாள் உற்பத்தி நிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசியல் அலைகள் இயங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு ஆணை உரிமையாளர் சங்கத்தின் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கண்காணிப்பு குழு அமைத்து கருத்து
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட அரிசி ஆலைகள் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் கூறுகையில், விவசாயிகள் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயம் செய்ய முடியாமலும் கூலி ஆட்கள் இல்லாமல் வெளி ஆட்களை கொண்டு பணியாற்றுவதால் அவர்களை மீட்க மின்கட்டணம் உயர்வு மிகவும் பாதிப்படையும் எனவும், கண்காணிப்பு குழு அமைத்து கருத்து கேட்டு மின் உயர்வை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion