மேலும் அறிய

ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்

இன்று மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள  குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்
 
குழப்பமான ரிப்போர்ட்
 
இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள்  உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 
 
ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்
 
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை
 
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்
 
ஒரு மாதத்தில் நடவடிக்கை
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
 
ஏரியை ஆக்கிரமித்த மேல்மருத்துவர் சித்தர் பீடம் - நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து தள்ளும் அதிகாரிகள்
 
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
 
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில்,  ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோவில் நிர்வாகம் சார்பாக தாங்கள் மேற்கொண்டிருந்த ஆக்கிரமிப்பு பகுதிகளே அவர்களாகவே அகற்றி வந்த நிலையில், இன்று மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர்.

இதுதவிர கீழ் மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேல்மருவத்துர் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 

அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!

அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!

“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
Doctors Strike: துணை முதல்வர் போட்ட ஸ்கெட்ச்! மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - பின்னணியில் தமிழக அரசு செய்தது என்ன? 
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அடிச்சது ஜாக்பாட்.. ஜனவரி முதல் ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூ. 1000 மகளிர் உரிமைத்தொகை!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
அரசு ஊழியர் வாழ்க்கையை இருட்டாக்குவதா? நாளை கருப்புத்துணி கட்டி போராட்டம்- CPS ஒழிப்பு இயக்கம் அழைப்பு!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
“48 மணி நேரத்தில் 3 கத்திக்குத்து சம்பவங்கள்” சென்னைவாசிகள் அதிர்ச்சி..!
மருத்துவர் மீது தாக்குதல்; காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - காவல் ஆணையர் விளக்கம்

“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!

"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!

Embed widget