மேலும் அறிய

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்... வழக்கு கடந்து வந்த பாதை

மேல்மருவத்தூரில் உள்ள கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல்மருவத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள  குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்... வழக்கு கடந்து வந்த பாதை

குழப்பமான ரிப்போர்ட்

இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த பொழுது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள்  உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.


மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்... வழக்கு கடந்து வந்த பாதை


ஒரு மாதத்தில் நடவடிக்கை

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரம் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சார்பில் போடப்பட்ட மனுவில் நாங்கள் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி விடும் என தெரிவித்திருந்தனர். ஏன் இதுவரை இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இனிமேல் காத்திருக்க முடியாது சரியாக ஒரே மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.


மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்... வழக்கு கடந்து வந்த பாதை


நீண்ட நாள் போராட்டம்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா நம்மிடம் கூறுகையில், தற்பொழுது நீதிபதி அளித்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது கல்யாண மண்டபம் , உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். எனவே நிச்சயம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவித்தார்.


மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்... வழக்கு கடந்து வந்த பாதை

ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நீண்ட நாளாக போராட்டம் ராஜாவிற்கு பலவகையில் மிரட்டல்கள் வந்துள்ளன. அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அவருடைய உதவியாளர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். எனவே சமூக ஆர்வலர் ராஜாவிற்கு பாதுகாப்பு அளிக்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
Chennai Power Shutdown ; சென்னையில் நாளை ( 04.08.26 ) மின் தடை !! எந்தெந்த பகுதி தெரியுமா ?
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! - வடபழனி நிலையத்தில் என்ன பிரச்சனை? முழு விவரம்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Anna Salai Flyover Opening Date: இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!
இனி 5 நிமிஷம்தான்! அண்ணாசாலை ட்ராஃபிக்கிற்கு எண்ட் கார்டு! நவம்பரில் திறக்கப்படும் மேம்பாலம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Embed widget