மேலும் அறிய
Advertisement
அத்திவரதர் கோயில் மூலவர் சன்னதியில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த மத்திய இணை அமைச்சர் - ஆகம விதிமீறல் என குற்றசாட்டு
கருவறையில் விக்ரகத்தை புகைப்படம் எடுக்க கூடாது என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி வந்த நிலையில் இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடு ஒருதலைபட்சமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
பக்தர்கள் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது மூலவர் சன்னதி அருகே செல்போன் எடுத்து செல்லக்கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி மூலவர் சன்னதிக்கு நேராக புகைப்படம் எடுத்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் கூட பக்தர்கள் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் அமைச்சர் கோவில் சன்னதி அருகே புகைப்படம் எடுத்து இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மத்திய வெளியுறவு மற்றும் கலை கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை கோவில்கள் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி ஆய்வு செய்து கோவிலில் உள்ள கலை சிற்பங்களை கண்டு ரசித்தார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை ஆய்வு செய்தபின் உலக பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்தனர். பின் மூலவர் சன்னதியில் நின்று கொண்டு மத்திய இணை அமைச்சர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் உடன் வந்தவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகைப்படத்தில் கோவிலின் கருவறையில் உள்ள தேவராஜ சுவாமி முழுவதுமாக தெரிந்தளவில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை கண்ட பக்தர்களும் சமூக ஆர்வலர் பெரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். பொதுமக்கள் கருவறையில் உள்ள மூலவர் விக்ரகத்தை புகைப்படம் எடுக்க கூடாது செல்போன் பயன்படுத்தக்கூடாது என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி வந்த நிலையில் இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடு ஒருதலைபட்சமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion