மேலும் அறிய

TN Rain Alert: 11 கி.மீ வேகத்தில் நெருங்கும் மாண்டஸ் புயல்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. முழு விவரம்..

தென் கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 460 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள "மாண்டஸ்" புயல் கடந்த 06 மணிநேரங்களில் 11 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தது, சுமார் 300 கி.மீ தொலைவில் திருகோணமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கு கிழக்கு-வடகிழக்கு,  சுமார் 420 கி.மீ காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கு, சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு. 550 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  

இது மேற்கு-வடமேற்கு திசையை கடந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே நகரும்.

08.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில்  லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில்  மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தலைப்பு செய்திகள்

சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
தென் மாவட்ட பயணிகளுக்கு ஜாக்பாட்! திண்டிவனம் - தாம்பரம் NH-32-ல் 'ஸ்மார்ட்' புரட்சி!
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?
சென்னையில் சொந்த வீடு கனவா ? 500 சதுர அடியில் சாத்தியமாக்குவது எப்படி ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget