Ropeway: மாமல்லபுரத்திற்கு அடித்தது ஜாக்பாட்... வருகிறது ரோப் வே... களத்தில் இறங்கும் மெட்ரோ நிர்வாகம்
Mamallapuram RopeWay Project: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு ரோப் வே, போக்குவரத்து முறை செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தொழிற்சாலை நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாகவும், மறுபடியும் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டமாகவும், சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்துச் செல்லும், மாவட்டமாகவும் பன்முகத் தன்மையுடன் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மாமல்லபுரம் - mamallapuram Sea Shore temple
இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக அளவில் பிரசித்தி பெற்ற வரலாற்று பொக்கிஷமான மாமல்லபுரமும் உள்ளது. மாமல்லபுரம் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் கால, மன்னர்கள் கலை அம்சத்தில் வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுன தபசு, குடைவரைக் கோயில்கள் என சர்வதேச பாரம்பரிய நினைவுச்சின்னமாக விளங்கி வருகிறது.
மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். மாமல்லபுரத்தை பொறுத்தவரை சிற்பங்கள் மட்டுமில்லாமல், கடற்கரை ஓரமுள்ள ரெசாட்களும் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதேபோன்று மாமல்லபுரத்தில் கிடைக்கும் கடல் உணவிற்கும் தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் மாமல்லபுரம்- Mamallapuram Traffic Issues
சென்னையில் இருந்து 2 மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய சுற்றுலா பகுதியாக மாமல்லபுரம் இருப்பதால், வார இறுதி நாட்களில் பல ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்கிற்காக மாமல்லபுரம் குவிந்து வருகின்றனர். மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் என்பதால், மாமல்லபுரத்தில் பேருந்து மூலமாக வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
மாமல்லபுரத்திற்கு வரும் மக்கள் பெரும்பாலானோர், தங்களது சொந்த வாகனத்திலோ அல்லது வாடகை வாகனத்திலோ வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்தில் கார், வேன்களில் ஏராளமான சுற்றுலா வந்து செல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாமல்லபுரத்தில் பல இடங்களில் குறுகிய சாலைகள் இருப்பதால், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
"ரோப் வே" - RopeWay Project In Mamallapuram
இதேபோன்று மாமல்லபுரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கும் முறையான வசதிகள் இல்லாததால், சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதேபோன்று சீசன் நேரங்கள் என சொல்லக்கூடிய, டிசம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலங்களில் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்களால் மாமல்லபுரம் கடும் போக்குவரத்து நெரிசலால் முடங்கி விடுகிறது.
எனவே வருங்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு, புதிய போக்குவரத்து முறையை கொண்டு வர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை குவைத்தனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சாலைகளை வரைமுறைப்படுத்தி, புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக உயர் போக்குவரத்து அமைப்பை ( ரோப் வே) ஏற்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போக்குவரத்து முறை நடைமுறைக்கு வந்த பிறகு, பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















