மேலும் அறிய
Advertisement
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...!
மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ..
1. கொரோனாவால் 20 மாத காத்திருப்புக்கு பின், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இன்று முதல் பள்ளி செல்ல உள்ளனர்.
2. காஞ்சிபுரம் காவல் கோட்டம் பகுதிகளில், வழிப்பறி, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன.
3. முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் மருத்துவமனையில் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலே சண்டையிட்டுக் கொண்டனர்.
4. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தேர்தல் ஜனநாயக முறைப்படி காஞ்சிபுரம் சங்க கட்டிடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
5. மதுராந்தகம் அருகே வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
6. கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன் விளைவாக இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 143 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. காஞ்சிபுரத்தில் உள்ள 91 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 22 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.
7. மெகா தடுப்பூசி முகாம்களின் போது மட்டுமின்றி, இதர நாட்களிலும் கொரோனா தடுப்பூசி அதிகம் போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
8. ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி, பெண் காவலாளியிடம் நுாதன முறையில், 15 ஆயிரம் ரூபாய் திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
9. சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைக்கிறாா்.
10. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று இரவு வீடு திரும்பினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion