மேலும் அறிய
Advertisement
9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை - தமிழக அரசு திட்டவட்டம்
அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் பராமரிக்கப்படும் 9 யானைகளையும் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட யானை ஜாய் மாலாவை, அதன் பாகன்கள் வினைல் குமார் மற்றும் சிவ பிரசாத் ஆகியோர் துன்புறுத்துவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது கோயில்களுக்கு 2010 - 2015 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட யானைகளை திரும்ப பெற அசாம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து, அசாம் அரசிடமிருந்து தமிழக அரசு பெற்ற ஒன்பது யானைகளையும் திருப்பி அனுப்ப தடை விதிக்க கோரி மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவகணேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தமிழகத்தில் கோயில் யானைகளை பராமரிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், ஆண்டுக்கு ஒரு முறை கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் யானை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு பாகன்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த யானைகளை மீண்டும் அசாமுக்கு அனுப்புவது என்பது மத உணர்வுகளை புண்படுத்தும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட யானைகளை மீண்டும் சுவாதீனம் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் 9 கோயில் யானைகளையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழகத்தில் உள்ள ஒன்பது கோயில்களில் பராமரிக்கப்படும் அசாம் மாநிலத்தைச் சார்ந்த யானைகளை திருப்பி அனுப்பப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கியதாகவும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கனியாமூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி ஆகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, கலவரம் நடந்த பள்ளிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிஎஸ்சி பட்டதாரியான அவரது எதிர்காலம் இந்த வழக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் ஆகாஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
நான்கு வாரங்களுக்கு தினமும் இரண்டு வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், அதன் பிறகு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, சின்ன சேலம் காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion