Madras High Court: ஒரு மாதத்திற்குள் மெட்ரோ நிலத்தை காலி செய்க - எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு உத்தரவு
Madras High Court: சென்னை கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கோயம்பேடு பகுதியில் உள்ள கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக 2011-ம் ஆண்டு திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எம்.பி. கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக அவருடைய நிலத்தை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தான் இந்த நிலத்தை பணம் கொடுத்த வாங்கியதாக எம்.பி. கலாநிதி வீராசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்கள் முடிவுற்ற நிலையில், மெட்ரோ நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்ந்தீமன்றம் ஆணையிட்டுள்ளது. அந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் 62.93 ச.மீ. பரப்பு நில மெட்ரோ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம நத்தம் நிலம் வீடில்லா ஏழைகளுக்கு வழங்ப்படுவதும் என்றும் எம்.பி. கலாநிதி வீராசாமியின் தந்தை ஆற்காடு வீராசாமி அமைச்சராக இருந்ததால் அவர் கிராம நத்தம் நிலத்தை பயன்படுத்த தகுதியற்றவர்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். அதோடு, சமூக நீதியை வலியுறுத்தும் அரசியல் கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.