CM Stalin Health: தமிழக முதல்வர் நலம்பெற வேண்டும்: சோனியா, கர்நாட முதல்வர் வாழ்த்து
”முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மாநில மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்” என கர்நாடகா முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் நலம்பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல் நலன் குறித்து விசாரித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தார். pic.twitter.com/EXSGSFsyyQ
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 15, 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
#BreakingNews
— எழில் ஆதித்தமிழன் (@EzhilAathi) July 14, 2022
முதல்வர் மு.க ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி#cm #mkstalin4pm2024 #mkstalin @Surendhar_Twitz @Ramanat75128649 pic.twitter.com/Cy6YLoeIAV
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் உடல்நலம் பெற வாழ்த்திய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ”முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மாநில மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைப் பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்