மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் ரயில்கள் பாதிப்பு.. பயணிகள் தவிப்பு..!
தொடர்வண்டி தாமதமானதால் வேலைக்கு செல்பவர் கடும் பாதிப்படைந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த திருமால்பூரில், இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக தினந்தோறும் பத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் திருமால்பூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோர், பணி நிமித்தமாக செல்வோர் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல திருமால்பூரில் இருந்து வழக்கமாக 7.00 மணி அளவில் புறப்படும் ரயிலானது புறப்பட்டு கூரம் அருகே வந்து கொண்டிருந்தபோது பேண்டோ கிராப் ( pantograph) பழுதின் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றது.
இதனால் காஞ்சிபுரம் புதிய மற்றும் பழைய ரயில்வே நிலையங்களுக்கு 7.20 மணிக்கு வரக்கூடிய ரயில்காக மணிக்கணக்கில் காத்திருந்த ரயில் பயணிகள் கோபமடைந்து, ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 9.30 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்படக்கூடிய ரயில் மூலம் 8.50 மணியளவில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ரயிலானது புறப்பட்ட சற்று நேரத்திலையே திருமால்பூரிலிருந்து 7.00-க்கு புறப்பட்ட ரயிலானது சுமார் 8.55 மணிக்கு காஞ்சிபுரம் புதிய ரயில்வே வந்தடைந்தது .
அதனை 9.30மணிக்கு இயக்கிட அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றியமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள் நிலைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தான் பணிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதாக கூறிய நிலையில், ரயில்வே நிலைய ஸ்டேஷன் மேனேஜர் பயணிகளிடம் அதிகார பாணியிலும், தரக்குறைவாகவும் பேசிய நிலையில், இதற்கு இரயில் பயணிகள் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பயணிகள் புகார் புத்தகத்தை கேட்ட நிலையில் அதிகாரிகள் புகார் புத்தகத்தை தர மறுத்தனர். மேலும் வாக்குவாதங்கள் தொடர்ந்த நிலையில் மாற்று விரைவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில்வே நிலைய அதிகார்களின் அலட்சியமான பதிலாலும், தரக்குறைவான பேச்சாலும் ரயில்வே நிலை அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் வாக்குவாததால், ரயில் நிலையமே சற்று நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விளையாட்டு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion