மேலும் அறிய
Advertisement
வடக்குப்பட்டு இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி துவங்கியது..! கீழடியை விட பழமையானதா ?
Vadakkupattu archaeological site : 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது. முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருட்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
வடக்குப்பட்டு தொல்லியல் களம் ( vadakkupattu archaeological site )
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன.
பழங்கால கட்டட அமைப்பு ( Pallava Period )
முன்னதாக ஜூன் மாதம் முதல் செலவு செப்டம்பர் மாதம் வரை நடைபெற்ற முதல் கட்ட அகழ்வாழ்வு பணியின் பொழுது, சில நாட்களிலேயே பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. பழைய கற்களை பயன்படுத்தி இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இதனைத் சுற்றி தோண்டியபோது பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செம்பு காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
தங்க அணிகலன்கள்
இதனைத் தொடர்ந்து அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்டபோது, ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள், ரவுலட் ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் 0.8 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டது. முதல்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருட்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
பழங்கற்கால கருவிகளை ( Mesolithic Period )
மேலும் சிறிய இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 1000 முதல் 1200 கற்கருவி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே இடத்தில் இவ்வளவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழங்கற்கால கருவிகளை வைத்த பார்க்கும் பொழுது இந்தப்பகுதியில் குறைந்தபட்சம் 12,000 முதல் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் முன்பு வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரே இடத்தில் அதிக அளவு கற்காலக் கருவிகள் கிடைத்ததால், இந்த இடம் கருவிகளை செய்யும் இடமாக இந்த இடம் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி
இதனை உறுதிப்படுத்த மேலும் அகழ்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில், இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று , இந்திய தொல்லியல் துறை கண்கானிப்பாளர் மு. காளிமுத்து தலைமையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கியுள்ளது. அகழாய்வு பணிகள் தொடர்ந்து 3 முதல் 4 மாதங்கள் நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வின் முடிவில் பல முக்கிய பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கிடைத்திருக்கும் கற்கால கருவிகள் கீழடியை விட பழமையானது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும் கூறிய அவர்களுக்கு, ' கீழடி ' என்பது வளர்ந்த நாகரிகம் எனவும், ஆனால் இங்கு கிடைக்கப்பட்டுள்ள பொருட்கள் கற்கால பொருட்கள் என தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion