மேலும் அறிய
Watch Video சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து - அதிர்ச்சி வீடியோ..!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து..

தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்து
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் எரியும் தீயை போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

சென்னை குன்றத்தூரில் இருந்து வேலூரை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் சில அருகே பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பேருந்தை நீலகண்டன் என்பவர் இயக்கி வந்தது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னிபேருந்து தீப்பிடித்து எரிந்தது .#sriperumbudur #bus #privatebus #fireaccident pic.twitter.com/OtsdkUg588
— Kishore Subha Ravi (@Kishoreamutha) July 7, 2022
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் இருங்காடு கோட்டையை சேர்ந்த தீயணைப்புத் துறையினர், தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்து எரிந்த தனியார் பேருந்தில், பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. வண்டியிலிருந்து புகை வருவது உணர்ந்த ஓட்டுனர் நீலகண்டன் உடனடியாக வண்டியை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வண்டியிலிருந்து வெளியேறியதால், அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பேருந்தை அருகே பொதுமக்கள் யாரும் செல்லாமல் இருக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















