மேலும் அறிய
Advertisement
இனி காஞ்சிபுரம் வேற லெவலில் மாறப்போகுது..! முதல் அடியை எடுத்து வைத்த மாவட்ட நிர்வாகம்...!
Kanchipuram Parking: காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவில் நிலங்களில் புதியதாக வாகனம் நிறுத்தும் இடங்கள் திறப்பு.
காஞ்சிபுரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவில் நிலங்களில் புதியதாக வாகனம் நிறுத்தும் இடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தனர்.
போக்குவரத்து நீர் சிக்கித் தவிக்கும் காஞ்சிபுரம் ( Kanchipuram Traffic )
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : கோவில்கள் நிறைந்த நகரம், பட்டுச்சேலைக்கு புகழ் பெற்ற நகரமாக விளங்கும், காஞ்சிபுரத்தில் நாள்தோறும் வெளியூர் வெளிமாநலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பட்டுச் சேலை எடுக்க வரும் வாடிக்கையாளர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும், பட்டுச்சேலை எடுக்க வரும் வாடிக்கையாளர்களும் தங்கள் சொந்த வாகனங்களில் வருவதால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
தொடர்ந்து புகார் ( Kanchipuram traffic )
இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். போக்குவரத்து பாதிப்பையும் நெரிசலையும் சமாளிப்பதற்காக சாலை ஓரங்களில் நிற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தும், இடங்களை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான விசாலமான நிலங்கள் கண்டறியப்பட்டு வாகன நிறுத்தும் இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய வாகன நிறுத்தம் ( new parking kanchipuram )
அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான இடம் சீரமைக்கப்பட்டு புதிய வாகன நிறுத்தம் இடமாக மாற்றப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. திறப்பு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா. சுதாகர் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புதிய வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்தார்.
மேலும், புதியதாக திறக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் நிறுத்த வந்த வாகனத்திற்கு கட்டண ரசீது வழங்கும் பணியையும் துவக்கி வைத்தார். புதிய வாகன நிறுத்தம் இடம் துவக்க நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பொறியாளர் கணேசன், ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எஸ் எல் என் எஸ். விஜயகுமார், ஜெகநாதன் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உணவு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion