மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : பாதியில் நின்ற கூட்டம் மேயரை முற்றுகையிட்ட மாமன்ற உறுப்பினர்.. கூட்டத்தில் பரபரப்பு
மேயரின் அறையை முற்றுகையிட்டு பாஜக பெண் மாமன்ற உறுப்பினர் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த மாநகராட்சி பெண் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களிடையே மொத்தம் 66 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அப்போது அதிமுக கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சிந்தன் பேசும்போது , பாக்கியலட்சுமி நகர் பகுதியில் திமுகவினர் நடத்தும் டாஸ்மாக் கடைக்கு வரியே வாங்காமல் மாநகராட்சி அலுவலர்கள் எப்படி குழாய் கனெக்சன் கொடுத்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, தன்னுடைய வார்டில் உள்ள குறைகளை பற்றி மேயரிடம் கூறிய பாஜக கட்சியை சேர்ந்த 46வது வார்டு பெண் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர், பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் கணக்கு குழு பற்றிய விளக்கம் கேட்க, நான் பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகின்றது, அதனால் சரியான தகவல்கள் தற்போது அப்டேட்டில் இல்லை என ஆணையர் கூறினார்.
ஆணையர் பேசிக் கொண்டிருந்தபோதே இடை மறித்த திமுக கட்சியின் காஞ்சிபுரம் மாநகராட்சி பெண் மேயர் மகாலட்சுமி யுவராஜ் ,பாஜக பெண் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசைப்பரிடம் இது போன்ற கேள்விகளை இங்கே கேட்க கூடாது, தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளுங்கள் என கோபமாக கூறிவிட்டு, பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து சென்று விட்டார். கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேயர் எழுந்ததால் அவரை தொடர்ந்து ஆணையர் மற்றும் அனைத்து திமுக உறுப்பினர்களும் அவரை பின் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள்.
காஞ்சிபுரத்தில் பெண் மேயரை முற்றுகையிட்ட பெண் மாமன்ற உறுப்பினர்.. pic.twitter.com/MwbX7p6v0L
— Kishore Subha Ravi (@Kishoreamutha) July 31, 2022
தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேச வந்திருந்த அதிமுக, பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ஏதுமறியாமல் திகைத்துப் போய் நின்றார்கள். ஏற்கனவே ஒரு முறை இதே போல் மேயரிடம் மாமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டதற்கு , அப்போதும் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார்.
பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு மேயர் உள்ளிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளியேறி சென்றதால் ஆவேசம் அடைந்த பாஜக பெண் மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் "கணக்கு குழு பற்றி முழு தகவல்களை அளிக்க விடாமல் தடுத்த மேயரையும், ஆணையரையும் கண்டித்து மேயர் அறையை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion