Navaratri 2023: கலர்ஃபுல்லாக மாறிய காஞ்சி காமாட்சி அம்மன்..! நவராத்திரி கோலாகலம்..!
Kanchipuram : " லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர் "
![Navaratri 2023: கலர்ஃபுல்லாக மாறிய காஞ்சி காமாட்சி அம்மன்..! நவராத்திரி கோலாகலம்..! kanchipuram kanchi kamakshi navaratri 2023 devotees worshiped Goddess Kamakshi, who appeared in the Navratri Kolu Mandapam in special attire along with Goddess Lakshmi and Saraswati Navaratri 2023: கலர்ஃபுல்லாக மாறிய காஞ்சி காமாட்சி அம்மன்..! நவராத்திரி கோலாகலம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/e2060b699be71f400c7ef67727e3c7781697421737378113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ( kanchipuram kamakshi temple )
![காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/5a7869d6d1577742344f8ff2b6e3fac11697421214157113_original.jpg)
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள் என்பது நம்பிக்கை.இந்த அளவிற்கு சிறப்புகள் கொண்ட உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ திருவிழா வரும் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
![காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/d56cfc90d07db5db5811071e113712f71697421566530113_original.jpg)
![காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/16/5b53f8857b3267060a74711129143ce41697421589759113_original.jpg)
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நவராத்திரி விழா ( 2023 )
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், 14ஆம் தேதி நவரா திருவிழா துவங்கியது, நவராத்தி விழா துவங்குகிறது. மறுநாள் 15ம் தேதி ரக்ச பந்தனம் யாக சாலை துவக்கம். நவராத்திரி விழாவை முன்னிட்டு 16ம் தேதி முதல், 26ம் தேதி வரை, காமாட்சி அம்மன், நவராத்திரி விழா மண்டபத்தில் எழுந்தருள்வார். இந்த ஒன்பது நாட்களும் சூரசம்ஹாரம் நடைபெறும். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள நவராத்திரி விழா மண்டபத்தில் தினசரி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த விழாவில், வரும் 22ம் தேதி அலங்கார மண்டபத்தில் இருந்து, காமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மன் நவராத்திரி விழா மண்டபத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும். வரும் 26ம் தேதி இரவு உற்சவர் காமாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலில் நவராத்திரி விழா மண்டபத்தில், இரவு 7:30 மணிக்கு தினசரி பக்தி இன்னிசை கச்சேரிகள் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை கோயில் ஸ்ரீகாரியம் சுந்தரேசய்யர், மணியகாரர் சூரியநாராயணன் செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)