Katchabeswarar Temple: திருமால் வழிபட்ட தலம்..! காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வரலாறு இதோ..!
kanchipuram kachabeswarar temple history in tamil " ஒரே கோயில் வளாகத்திற்குள் இரண்டு சிவாலயங்கள் உள்ளடங்கிய பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு "
கோவில் நகரம் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகரம், சிவக்காஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி என இரண்டு பகுதிகளாக உள்ளது. இந்த காஞ்சி மாநகரில், எந்த மூலையில் இருந்தாலும் உங்களால் ஒரு கோவில் கோபுரத்தை பார்த்து விட முடியும். காஞ்சிபுரம் முழுவதும் கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரத்திற்கு "கோவில் நகரம் "பெயரும் உள்ளது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் கோவில்களை பார்க்க படையெடுத்து வருவது வழக்கமாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கைலாசநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், வைகுண்ட ராஜா பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் திருக்கோயில் இப்படி பல நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கச்சபேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஆனது நாளை நடைபெற உள்ளது. கச்சபேஸ்வரர் திருக்கோயில் வரலாறு , சிறப்பு அம்சங்கள் அதன் அமைவிடம் குறித்து பார்க்கலாம்.
அமைவிடம்:
காஞ்சிபுரம் மாநகரில் நெல்லு கார தெரு பகுதியில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
தல விருச்சக மரம்
இக்கோவிலுக்கு தல விருச்சிகம் மரமாக விசேஷ முருக்கடி மரம் உள்ளது
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் ( kanchipuram kachabeswarar temple )
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயில் " கச்சபேசம் " எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலைப்பற்றி காஞ்சிபுரம் புராணத்தில் தனி படலமாக அமையப்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது . கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தல புராணம்
அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை கடைந்த பொழுது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்திர மலை கடலில், மூழ்கிக் கொண்டிருந்தது. இதனால் அமிர்தம் கிடைக்காமல் பணி தடைபடும் அபாயம் இருந்தது. இதனால் மகாவிஷ்ணு ஆமை அவதாரம் எடுத்தார். மந்திர மலையை தாங்கி பிடித்து பணி நிறைவடைய உதவி புரிந்தார். இதனால் திருமாலுக்கு செருக்கு உண்டாகியதாக கூறப்படுகிறது. உலகம் அழியும் வகையில் இதனால் உலகம் அழியும் வகையில், கடலை கலக்கியதால் சிவபெருமான் கோபம் அடைந்துள்ளார். சிவபெருமான் ஆமை ஓட்டினை, வென்டக மலையனிடையே மறைத்து வைத்துள்ளார் அதன் பிறகு, தனது தவறை உணர்ந்து. இதனை அடுத்து திருமால் ஆமை வடிவத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் பெயர் காரணம்
ஆமை வடிவில் இருந்த சிவன் வழிபட்டதால் இந்த தளத்திற்கு, கச்சப்ரேஸ்வரர் என பெயர் பெற்றது. ( கச்சபம்-ஆமை. கச்சப+ஈசர்=கச்சபேசர் )
சிவலிங்க சிறப்புகள் என்ன ?
டக்கு நோக்கிய ஏழு நிலைகொண்ட ராஜகோபுரம் உள்ளது .இங்குள்ள சிவலிங்கம் ஆமை ( கூர்மம் ), தாமரை ( பத்மம் ), நாகம் , யுகங்கள் ,சிம்மம் ஆகிய ஐந்து ஆசனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அமைப்பில் சிவன் காட்சி தருவது அரிதான ஒன்று. இத்திருக்கோயிலில் ஒரே இடத்தில் இரு சிவாலயங்கள் உள்ளன. ஒரே கோயில் வளாகத்திற்குள் இரண்டு சிவாலயங்கள் உள்ளடங்கிய பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு .
முக்கிய திருவிழாக்கள்
இக்கோவிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் மிக முக்கிய விழாவாக உள்ளது. கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைஞாயிறு என்ற விழா நடைபெற்று வருகிறது. அத்தினங்களில் மண்டை விளக்கு ஏற்றி திருக்கோவிலை சுற்றி வர தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக்குத்து போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். கோவிலில் உள்ள இஷ்டசித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தலை முழுகினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒரு நாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்