மேலும் அறிய
Advertisement

Kanchipuram: போதைப் பொருளே வேண்டாம்..! களத்தில் இறங்கி அட்வைஸ் செய்யும் காஞ்சிபுரம் போலீஸ்..!
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காவல்துறை கண்காணிப்பாளர்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் (Kanchipuram News) : உலகம் முழுவதும் மனித குல சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் ஓழிப்பு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மா. சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் காந்தி சாலை இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி காஞ்சிபுரம் நகரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது போதை பொருள் ஓழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion