School: காஞ்சியில் தொடரும் மழை..! ஆனாலும் ஸ்கூலுக்கு கிளம்புங்க மாணவர்களே..!
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் திடீரென மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெளுத்து வாங்கும் மழை:
சென்னை சென்டிரல், எழும்பூர், பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், , அம்பத்தூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு, புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், பாடி, கொரட்டூர், கள்ளிக்குப்பம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மகிழ்ச்சியும் - அவதியும்:
3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழை பெய்து வருவதால், பகல் நேரங்களில் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக வாட்டி வதைத்து வரும் வெய்லின் தாக்கம் குறைந்துள்ளது. சில்லென்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது. அதேநேரம், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் உள்ளிட்டோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.