மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம்: களவாடப்பட்ட கோவில்.. முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்..
1071-ம் வருட பழமையான நின்று அருளிய பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் கோயிலை காணவில்லை' என்று புகார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் 1071 வருடம் தொன்மையான இன்று அருளின பெருமாள் பொய்ய கொண்ட ஆழ்வார் திருக்கோவில் களவுபோயுள்ளது என முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பயிற்சியாக பணியாற்றிய பொன்மாணிக்கவேல் புகார் அளித்திருப்பது காஞ்சிபுரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
">
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆண்டு பழமையான நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் எனும் பெருமாள் திருக்கோயில் இருந்து உள்ளது. இந்த கோவில் கடந்த 1906 ஆம் ஆண்டு, ஐரோப்பிய கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் 115 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் கோவிந்த வாடி அகரம் கிராமத்தில் இருந்த நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார் திருக்கோவில், தற்பொழுது காணாமல் போய் உள்ளது என பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனுவினை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் மாணிக்கவேல் கூறுகையில், ”சோழர் பேரரசர்களால் கட்டப்பட்டு வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான கோவில் வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான கல்வெட்டுக்களுடன் கூடிய நின்று அருளின பெருமாள் உய்யக்கொண்ட ஆழ்வார், கோவில், விக்கிரகங்கள், மணவாள பெருமாள், அனுமன் சிலை உள்ளிட்டவை காணாமல்போனதை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார் .
மக்கள் வழிபாட்டில் இருந்த பெருமாள் கோவில் முற்றிலும் களவாடப்பட்டு மண்ணிலிருந்து, மறைந்து போன நிகழ்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவர்களுக்கும் தலைவர்களாக உள்ள ஜீயர்களுக்கும் இன்று வரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் சுமார் 10,000 மேற்பட்ட புராதான மற்றும் பழைய கோவில்கள் உள்ளது அவற்றின் மூலம் வருவாய் என வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion