ரூ.525 கோடி.. ECR-இல் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. துவங்கிய பணிகள்.. முடிவடைவது எப்போது ?
Kalaignar International Conventional Centre: முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர பரப்பளவில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் இருக்கும் முக்கிய இசை அமைப்பாளர்கள், பிரபல பாடகர்கள் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதேபோன்று பல்வேறு கலைத்துறையினரும் இதுபோன்ற, அதிகளவு மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் அவ்வாறு நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஏற்ற, அடிப்படை வசதிகள் என்பது மிகவும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இதற்காக கட்டமைக்கப்பட்ட இடமில்லாதது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஏனென்றால் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம், சுற்றுலாத் துறைக்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால் இன்றைய சூழலில் இதற்காக, முறையான கட்டமைப்பு இல்லாததால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, என்பது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்திருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு
இந்தநிலையில் பலதரப்பு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்னாட்டு அரங்கம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதில் உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகள் இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. உலக அளவில் Best In Class பன்னாட்டு அரங்கம் அமையும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் பன்னாட்டு அரங்கம் - kalaignar international conventional centre
கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு மையம் என்ற பெயரில், உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக நிறுவனங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், உலகத் திரைப்பட விழாக்கள் போன்றவை நடக்கும் இடமாக "கலைஞர் பன்னாட்டு அரங்கம்" அமைய உள்ளது.
கலைஞர் பன்னாட்டாரங்கம் எங்கே அமைய உள்ளது ? - kalaignar conventional centre location
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பன்னாட்டு அரங்கம் அமையப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த முட்டுக்காடு படகு இல்லம் அருகே இந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமையப்பட உள்ளது.
திட்டத்தின் மதிப்பீடு என்ன ?
முட்டுக்காடு பகுதியில் சுமார் 37 ஏக்கர் நிலம் இதற்காக தேர்வு செய்யப்பட்டு, பல கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. சுமார் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னாட்டு அரங்கம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. சரியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கோவளம் கடற்கரை அருகே இந்த பிரம்மாண்ட பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key features of kalaignar international conventional centre
சென்னை நந்தம்பாக்கத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வர்த்தக மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் எதிர்காலத் தேவைக்கு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலே கலைஞர் கன்வென்ஷனல் சென்டர் அமைய உள்ளது.
5000க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தங்கும் விடுதிகள், ஊடக அரங்கங்கள், கண்காட்சி அரங்கங்கள், உயர்தர உணவகங்கள், பூங்காக்கள் மற்றும் பிரம்மாண்ட வாகன நிறுத்தும் இடம் ஆகியவை உள்ளடக்கிய வகையில் அமையப்பட உள்ளது. சுமார் நூத்தி ரெண்டு கோடியில் 5000 இருக்கைகளுடன் மாநாடு கூடம், 172 கோடியில் 10000 பேர் அமரும் அரங்கம் அமையப்பட உள்ளது.
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ?
தமிழக அரசு சார்பில் இதற்காக டெண்டர் கோரப்பட்டது. தொடர்ந்து கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடும் அனுமதி பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டுமான பணிகள் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணிகள் நிறைவறைவது எப்போது ?
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு பணிகள் வேகம் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரங்கத்தில் முழு கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.





















