நைனிடால் வங்கியில் வேலை! ரூ.93,000 வரை சம்பளம்! உடனே விண்ணப்பியுங்கள்! | Bank of Baroda வேலைவாய்ப்பு
ரிசர்வ் வங்கியால் அட்டவணைப்படுத்தப்பட்ட கமர்ஷியல் வங்கி பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த வங்கியில் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் துணை வங்கியான நைனிடால் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டயக் கணக்காளர், பயிற்சி அதிகாரிகள், வாடிக்கையாளர் சேவை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்பட்டிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.93 ஆயிரம் வரை வழங்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவின் துணை வங்கியாக நைனிடால் வங்கி உள்ளது. ரிசர்வ் வங்கியால் அட்டவணைப்படுத்தப்பட்ட கமர்ஷியல் வங்கி பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த வங்கியில் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள்:
வாடிக்கையாளர் சேவை உதவியாளர் (CSA), பயிற்சி அதிகாரிகள், பட்டயக் கணக்காளர் (CA), தகவல் தொழில்நுட்ப (IT) அதிகாரி, சட்ட அதிகாரி, கிரெடிட் ஆஃபிசர், விவசாய கள ஆஃபிசர், மனிதவள அதிகாரி, மேலாளர் - தகவல் தொழில்நுட்பம் (IT) என 14 வகையான பதவிகளில் 185 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. வாடிக்கையாளர்களின் தொடர்பு அதிகாரி, PROFFESIONAL OFFICER பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். RISK OFFICER பணிக்கு எம்பிஏ (நிதி) முடித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
- மேலாளர் / பாதுகாப்பு அதிகாரி, நிலை II தரம் - பணிக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- மேலாளர் - பட்டயக் கணக்காளர் (CA) - பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்
- CUSTOMER SERVICE ASSOCIATE பணி : மாதம் ரூ. 24,050 - ரூ. 64,480
- OFFICER GRADE SCALE 1 - ரூ. 48,480 - ரூ. 85,920
- MANEGER GRADE SCALE II - ரூ. 64,420 - ரூ. 93,960
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம் தமிழகத்திலும் அமைக்கப்படும். தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை ஒருமுறை படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். ஸ்கேல் 1 & 2 பதவிகளுக்கு ரூ. 1,500 கட்டணம் ஆகும். விண்ணப்பிக்க வரும் 01.01.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.nainitalbank.bank.in/english/home.aspx





















