(Source: ECI/ABP News/ABP Majha)
Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!
’தனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருகமன் சபரீசனை நன்றாக தெரியும் என்றும் தான் செய்யும் வேலையை செய்யவில்லை என்றால், உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என மிரட்டுகிறாராம்’
தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக உள்ள விஜயகுமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் அரவிந்தன் ஐபிஎஸ் செங்கல்பட்டு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், அவர் திடீர் என மாற்றப்படுவதற்கு காரணம் இருக்கிறது. செங்கல்பட்டில் தன்னால் பணியாற்ற முடியாது என கூறி விஜயகுமாரே, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களால் எனக்கு சென்னைக்கு மாற்றல் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
காவல் துறை வட்டாரத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம், அவர்கள் சொல்லும் விஷயங்கள் பகீர் ரகமாக இருந்தன. காஞ்சிபுரம் சரக பெண் அதிகாரியின் டார்ச்சர் தாங்கமால்தான் விஜயகுமார் டிரான்ஸ்பர் கேட்டார் என விவரம் அறிந்த காவல்துறையினர் தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள்.
தனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருகமன் சபரீசனை நன்றாக தெரியும் என்றும் தான் செய்யும் வேலையை செய்யவில்லை என்றால், உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என, தனது எல்லைக்கு உட்பட்ட அதிகாரிகளை மிரட்டி தனக்கு சாதகமான வேலையை செய்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
joined as SP chengalpattu district. will act as team leader in enforcing law& order. anyone anytime can reach me 9994790008
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) June 8, 2021
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன். அனைவரும் இணைந்து செயல்படுவோம். காவல் / பாதுகாப்பு சம்மந்தமாக என்னை தொடர்பு கொள்ள 9994790008 pic.twitter.com/OtuhpP5JVs
இவர் சொல்லும் பணியை செய்ய விரும்பாத விஜயகுமார், வேறு வழியின்றி தனிப்பட்ட காரணங்களை சொல்லி, சென்னைக்கு மாற்றல் செய்து தர வேண்டும் என டிஜிபியிடம் கேட்டார், அதன் அடிப்படையில்தான் இப்போது அவருக்கு டிரான்ஸ்பர் வந்துள்ளது என்றனர். செங்கல்பட்டு எஸ்.பி. மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளையும் அதை செய்து கொடுக்க வேண்டும், இதை செய்துகொடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்கிறார் என்று குமுறுகின்றனர் காஞ்சி சரக காவல்துறையினர்.
இதைபோலவே, திருவாரூர் எஸ்.பி.யாக உள்ள மற்றொரு விஜயகுமாரும் தனக்கு டிரான்ஸ்பர் தரவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபுவிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு காரணமாக அவர் சொல்லியுள்ளது, திருச்சி தலைமை அதிகாரி காட்டும் கடுமையை தன்னால் தாங்கமுடியவில்லை என்பதுதான்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்திருக்கும் நிலையில் எஸ்.பி. விஜயகுமார் டிரான்ஸ்பர் கேட்டிருப்பதால், அவருக்கு பதில் அங்கு யாரை நியமிக்கலாம் என்று டிஜிபி ஆலோசனை நடத்தியிருக்கிறார். விரைவில் திருவாரூர் எஸ்.பி.யும் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்