காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று எங்கெங்கு மின் நிறுத்தம் தெரியுமா?
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் துணை மின் நிலையம் இன்று 10 முதல் 2 மணிவரை மின் நிறுத்தம்..
சென்னை மின்வெட்டு
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் துணை மின் நிலையம் இன்று 10 முதல் 2 மணிவரை மின் நிறுத்தம் , அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம், கிளியா நகர், எலப்பாக்கம், இராமாபுரம், அம்மனுார், பொற்பனங்கரணை, வேலாமூர், மதுார், கல்லியங்குணம், ஆனைக்குன்றம், ரெட்டியார்பாளையம், மின்னல்சித்தாமூர், தொழுப்பேடு, கடமலைபுத்துார், பெரும்பேர்கண்டிகை. சின்னகயப்பாக்கம், ஒரத்தி, பொறங்கால், அன்னங்கால், கூனங்கரணை, கீழ்அத்திவாக்கம், கொங்கரை, களத்துார், முன்னங்குளம், அனந்தமங்கலம், சித்தாமூர், தொன்னாடு, பெருவேலி, நீர்பெயர், அவுரிமேடு, ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேத்தப்பாக்கம், பொறையூர், மழுவங்கரணை, நுகும்பல், பூங்குணம், போரூர், விளாங்காடு, போந்துார், வெடால், பெரியகளக்காடி, சின்னக்களக்காடி, கடுக்கலுார், ஒத்திவிளாகம், கயப்பாக்கம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகள். ஒமேகா துணை மின் நிலையம்: குன்னப்பட்டு, மானாம்பதி, சந்தானப்பட்டு, சிறுதாவூர், ஆமூர், முந்திரித்தோப்பு, அருங்குன்றம், அகரம், கழனிப்பாக்கம், திருநிலை, ஓட்டேரி மற்றும் அவற்றின் சுற்றுப்புற பகுதிகள், ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.