மேலும் அறிய
Advertisement
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
காஞ்சிபுரத்தில் தேர்தல் நிறுத்தம், வன்கொடுமை செய்த தந்தை கைது, சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ...
1. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் - தமிழக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் (83) நேற்று இரவு 10.00 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார் .
2. காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் 36 தற்கொலை செய்ததால் வார்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3. விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை அவரது தந்தையும், தந்தையின் நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன், கந்தகோணி ஆகியோரை போக்சோவில் கைது செய்தனர்.
4. விழுப்புரத்தில் வீட்டின் அருகே கீழே கிடந்த செல்போன், 2 ஆயிரம் பணத்தை அரசு பள்ளி மாணவன் எடுத்து வந்து விழுப்புரம் எஸ் பி ஸ்ரீநாதாவிடம் ஒப்படைத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
5. திருவண்ணாமலை-மணலூர் பேட்டை சாலையில் வழிப்பறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
6. திருவண்ணாமலை மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து, கணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
7. சென்னை வாய்ப் பகுதியில் கான்கிரீட் கம்பி குத்தி முதுகுப்புறத்தில் வெளிவந்ததில் பலத்த காயமடைந்த இரண்டு வயது குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவா்கள் காப்பாற்றி உள்ளனா்.
8. சென்னை விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.766 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9. சென்னை விமான நிலையத்திற்கு, சர்வதேச விமான கவுன்சில் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
10. சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் வேளச்சேரி சார்பதிவாளர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion