மேலும் அறிய
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. வாலாஜாபாத்-பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், வாலாஜாபாத் வழியாக, அவளூர் செல்லும் பல கிராம மக்களுக்கு, களக்காட்டூர் கிராமம் வழியாக, சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. வட மாநில இளைஞர்களால் அடித்து கொல்லப்பட்ட ஓரகடம் டாஸ்மாக் மதுபானக் கடை விற்பனையாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண உதவி. நிவாரண உதவித் தொகை 10 லட்சம் ரூபாய்கான காசோலையை குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
3. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,17, 18 ஆம் தேதிகளில் சென்னையில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
4. இயற்கை சீற்றங்களினால் பொது இடங்களில் நடக்கும் விபத்துக்களுக்கு, இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க, எட்டு வாரங்களில் வழிமுறைகள் வகுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. சென்னை வண்ணாரப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றக் கோரி, பேருந்து முன் படுத்து பெண்கள் சாலை மறியல்
6. மழை நீர் தேக்கத்தால் மணலி விரைவு சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சென்னை, எம்.எப்.எல். சந்திப்பு துவங்கி சாத்தாங்காடு சந்திப்பு வரையிலான, 2 கிலோமீட்டர் துார மணலி விரைவு சாலையில், புழல் உபரி நீர் திறப்பு காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்தது.மூன்று நாட்களாக, இச்சாலையில் தண்ணீர் ஓடியதால், தார் சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
7. சம்பளம் வழங்காததால் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தை சுகாதார பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
8 . சமுதாயப் பணிகளை அறிந்துகொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல் வேண்டும் செங்கல்பட்டு கலெக்டர் ரகுநாத் வேண்டுகோள்.
9. ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் காந்தி தெருவை சேர்ந்த கமல கண்ணன் என்பவர் வீட்டில் இருந்து 15 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.
10. உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனி ஓய்வுபெற்ற மின்சார ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
ட்ரெண்டிங் செய்திகள்
வினய் லால்Columnist
Opinion