மேலும் அறிய
Advertisement
லாரியில் பணம் பறிப்பு... 166 பேர் கைது...5 மணி நேரத்தில் கொரோனா முடிவு... சென்னையை சுற்றிய செய்திகள் இதோ!
5 மணி நேரத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் முடிவுகள், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
2. சென்னையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பை தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட உள்ள மழை நீர் வடிகால்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
3. காஞ்சிபுரம் அருகே சிபட்டி காரை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போயிருந்த குளத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டனா். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தின் மதிப்பு சுமாா் ஒரு கோடி.
4. கனரக லாரிகளை வழிமறித்து அடையாளம் தெரியாத 10 போ் அடங்கிய கும்பல் லாரி ஓட்டுநா்களிடம் பணம் பறிப்பதாகவும், தாக்குதவதாகவும் லாரி உரிமையாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யை சந்தித்து புகாா் அளித்தனா்.
5. செங்கல்பட்டு மூன்றாவது பாதையில், பொங்கல் பரிசாக, ஜனவரியில் ரயில் இயக்க ஏற்பாடு நடக்கிறது. தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை 256 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது.
6. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓசூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை.
7. திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் `ஸ்டாமிங் ஆபரேஷன்' நடத்தி 166 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, கஞ்சாவை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
8. ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்படுவாக கூறி ஆசிரியர்களை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9. தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், பொதுமக்கள் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
10. சென்னை விமான நிலையத்தில், ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை மேற்கொள்ளும் பயணியருக்கு, ஐந்து மணி நேரத்தில் முடிவுகள் வழங்குவதாக சென்னை விமான நிலையம் தெரிவித்து உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion