3வது மாடியில் ரிஸ்க்!துப்பட்டாவை கயிறாக்கி பால்கனிக்கு ஷார்ட்கட்! கிழிந்த துணியால் பலியான மாணவி
காலையில் மகிழ்மதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அகாடமிக்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் பயிற்சி முடிந்து நேற்று மதியம் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் உள்ளே இருந்த நபர் கதவை திறக்கவில்லை.
மாடியில் இருந்து வீட்டின் பால்கனிக்கு துப்பட்டா உதவியுடன் கீழே இறங்கிய போது, எதிர்பாராத விதமாக துப்பட்டா அறுந்து 3வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பகுதியை சேர்ந்த 24 வயதான பெண் மகிழ்மதி. இவர், சென்னை ஜாம்பஜார் கண்ணப்பர் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் தேர்வுக்காக படித்து வந்துள்ளார்.
வழக்கமாக மகிழ்மதி வார இறுதி நாட்களில் தனது சொந்த ஊரான நாமக்கல் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை தனது உறவினர் ஒருவரை ஊருக்கு செல்ல உடன் வருமாறு அழைத்துள்ளார். அந்த நபர் நேற்று காலை மகிழ்மதி வசிக்கும் அறைக்கு வந்துள்ளார். காலையில் மகிழ்மதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அகாடமிக்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். வீட்டில் உறவினர் இருந்துள்ளார். பின்னர் பயிற்சி முடிந்து நேற்று மதியம் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் உள்ளே இருந்த நபர் கதவை திறக்கவில்லை.
செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகிழ்மதி, குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்று தனது துப்பட்டா உதவியுடன் குடியிருப்பின் பின்பக்கம் வழியாக வீட்டின் பால்கனிக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். தனது துப்பட்டா உதவியுடன் மொட்டை மாடி வழியாக கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டா பாரம் தாங்காமல் கிழிந்து அறுந்துள்ளது. இதில் மகிழ்மதி 3வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படிக்க : ஆற்காடு வீராசாமி நலம்! ஒருமையில் விளாசிய கலாநிதி வீராசாமி - வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!
இது குறித்து தகவல் அறிந்த ஜாம்பஜார் போலீசார் மாணவி மகிழ்மதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உயிரிழந்த மாணவி மகிழ்மதி அறையில் தங்கியிருந்த உறவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்