நிர்ணயித்ததை விட இரு மடங்கு அதிகமாக தடுப்பூசி செலுத்திய காஞ்சிபுரம்..! எவ்வளவு பேருக்கு தெரியுமா?
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெகா தடுப்பூசி முகாம் 602 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29,746 நபர்களுக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான தகுந்த எண்ணிகையில் செவிலியர்களும், தகவல் பதிப்பாளர்களும், பயனாளிகளை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு தகுந்த பணியாளர்கள் , மருத்துவம், உள்ளாட்சி, சத்துணவு, பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி பணியில் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.
இந்த மெகா தடுப்பூசி முகாமில் தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கு 29,246 தாண்டி 200 சதவீதம் எண்ணிக்கையான 60,040 நபர்களை எட்டியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடு மற்றும் பயனாளிகளின் பங்களிப்பின் மூலம் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் - 17380 பேர். , உத்திரமேரூர் - 10987 பேர், வாலாஜாபாத் - 7966 பேர், ஸ்ரீபெரும்புதூர் - 13284 பேர், குன்றத்தூர் - 19370 பேர். மாவட்ட ஆட்சியர் மருத்துவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் , மாவட்ட தடுப்பூசி முகாம் கண்பாணிப்பளரோ முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் என மும்முனை கூட்டணி செயல்பாடுகள் காஞ்சிபுரத்தை வெற்றி கூட்டணியாக்கியுள்ளது. இதற்கு உறுதுணை புரிந்த அத்தனை நபர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு
தமிழக அரசின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. இம்மாவட்டத்தில், ஏற்கனவே 867322 நபர்களுக்கு முதல் தவணையும், 281,250 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10,31422 பேர் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெற்றது. 918 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம் மூலம் 82535 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தெரிவித்தது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரே நாளில் நேற்று நடந்த 1,029 தடுப்பூசி முகாம்களில், 4,000 ஊழியர்கள் பங்கேற்றனர். 1 லட்சத்து 11 ஆயிரத்து, 200 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நேற்று மாவட்டம் முழுதும், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சிறப்பு முகாம் ஆவடியில் நடந்த முகாமை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.